அன்னதான நிகழ்வில் பங்கேற்பதற்காக சென்ற இளம் பிக்கு மரணம்.

dead body 2

ஊவா குடாஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெலுல்ல பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இடம்பெற்ற அன்னதான நிகழ்வில் பங்கேற்பதற்காக வந்திருந்த பௌத்த பிக்குகள் சிலர், கிரிந்தி ஓயாவுக்கு நேற்று நீராடச் சென்றுள்ளனர்.

குறித்த நிகழ்விற்கு சென்றிருந்த 18 வயதுடைய இளம் பிக்கு ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

நீராடிக்கொண்டிருந்த பொது அவர் எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கிக் காணாமல்போன நிலையில், பிரதேச மக்கள் உடனடியாகப் அவரை மீட்டுத் தணமல்வில ஆதார வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பில் ஊவா குடாஓயா காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version