அனர்த்தத்திற்குள்ளான படகிலிருந்து இந்திய மீனவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.

நெடுந்தீவு கடற்பரப்பில்

நெடுந்தீவு கடற்பரப்பில் இந்திய இழுவைப் படகு ஒன்று நேற்றிரவு சீரற்ற வானிலை காரணமாக அனர்த்தத்திற்குள்ளான நிலையில், குறித்த படகில் இருந்த 11 இந்திய மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.

மேற்படி படகில் 11 இந்திய மீனவர்கள் இருந்த நிலையில் அவர்கள் அனர்த்தத்திற்குள்ளாகினபோது, குறித்த மீனவர்களை பாதுகாப்பாக மீட்பதற்கான நடவடிக்கையை இலங்கை கடற்படை ஆரம்பித்தது.

அதன்படி, நீண்ட முயற்சியின் பின்னர் இன்றைய தினம் குறித்த 11 இந்திய மீனவர்களையும் கடற்படையினர் மீட்டு நெடுந்தீவு கரைக்கு அழைத்து வந்தனர்.

மேலும், மீட்கப்பட்ட மீனவர்கள் அனைவரும் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுக்குத் தேவையான அடுத்தகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அத்துடன், கடல் கொந்தளிப்பால் கரையொதுங்கிய இழுவைப் படகை மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்திற்கு கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகளையும் கடற்படையினர் மேற்கொண்டுள்ளனர்.

 

Exit mobile version