வெள்ளத்தால் முட்டைத் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு – பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் எச்சரிக்கை!

Eggs 848x565 1

அண்மையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் அதிக அளவில் கோழிகள் இறந்ததன் காரணமாக, எதிர்காலத்தில் முட்டைகளுக்குத் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன எச்சரிக்கை விடுத்துள்ளார்.

முட்டைகளின் விலை ஏற்கனவே அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். முட்டைக்கான தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வு, வரவிருக்கும் பண்டிகைக் காலத்தில் கேக்குகளின் உற்பத்தியைப் பாதிக்கக்கூடும் என அவர் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது கூறியுள்ளார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கோழிப் பண்ணைகளுக்கு அரசாங்கம் உரிய நிவாரணங்களை வழங்குவதன் மூலம், முட்டை உற்பத்தியை விரைவாக வழமைக்குக் கொண்டுவர முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version