ரகித ராஜபக்ச உள்ளிட்ட குழுவினரை பிணையில் செல்ல கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவின் மகன் ரகித ராஜபக்ச, முன்னாள் சமகி ஜன பலவேகய (SJB) ஹொரன தேர்தல் தொகுதி அமைப்பாளர் சரித் அபேசிங்க, விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் இலங்கை வரையறுக்கப்பட்ட முன்னாள் நிறைவேற்று இயக்குனர் அருண ஸ்ரீ வருஷஹென்னடிகே ஆகியோர் கைது செய்யப்பட்ட நிலையில், இவ்வாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.

