திருமண பதிவுகளுக்கு மாத்திரம் அனுமதி!!!

COVID தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார் அஜித் ரோஹண!

COVID தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார் அஜித் ரோஹண!

திருமண பதிவுகளுக்கு மாத்திரம் அனுமதி!!!

திருமண பதிவுகளுக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்படுமெனவும் திருமண நிகழ்வுகளுக்கு முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது எனவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

திருமண பதிவுகளை மாத்திரம் வீடுகளில் நடத்த முடியும் என அவர் கூறினார்.

மணமகள், மணமகன், அவர்களின் குடும்பத்தினர், பதிவாளர் மற்றும் இரண்டு சாட்சியாளர்கள் மாத்திரமே திருமணப் பதிவின்போது கலந்துகொள்ள முடியும் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டார்.

இவர்களை தவிர்ந்த ஏனைய எவரும் திருமணப் பதிவில் கலந்துகொள்ள முடியாது எனவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் கூறினார்.

Exit mobile version