ஜே.என் வன் ஒமிக்ரோன் உப வைரஸ் திரிபு தொடர்பில் எச்சரிக்கை

tamilnid 23

Warning About Jn One Omicron Subvirus Strain

ஜே.என் வன் ஒமிக்ரோன் உப வைரஸ் திரிபு எனப்படும் புதிய வகை கோவிட் வைரஸ் தொற்று தொடர்பில், பொதுமக்கள் அச்சம் கொள்ளத்தேவையில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

சுகாதார அமைச்சு அறிக்கையொன்றினை வெளியிட்டு இதனை அறிவித்துள்ளது.

ஒமிக்ரோன் உப வைரஸ் திரிபு குறித்து 19 வைத்தியசாலைகளில் மாதிரிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜே.என் வன் ஒமிக்ரோன் உப வைரஸ் திரிபு உலகின் 41 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளதுடன், இதுவரை 7,000க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த வைரஸ் தொற்றுக்குள்ளானோருக்கு தொடர்ச்சியான இருமல், சுவை மற்றும் வாசனை இழப்பு, அதிக காய்ச்சல், சோர்வு, வாந்தி உள்ளிட்ட அறிகுறிகள் ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, பொதுமக்கள் உரிய சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Exit mobile version