போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

Police Checking

போக்குவரத்து விதிகளை மீறும் சாரதிகளுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.

குடிபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்ய விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

அத்தோடு பண்டிகைக் காலத்தில் தொடர்ந்து 24 மணிநேர விசேட சோதனை நடவடிக்கைகளும் பொலிஸாரால் மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்படத்தக்கது.

 

#SriLankaNews

Exit mobile version