இந்தோனேசியா மத்திய ஜாவாவில் பாரிய மண்சரிவு: கடும் மழைவீழ்ச்சியால் 11 பேர் உயிரிழப்பு, 12 பேரைக் காணவில்லை!

aJqHp SD

இந்தோனேசியாவின் மத்திய ஜாவா மாகாணத்தில் பெய்த கடும் மழைவீழ்ச்சியால் ஏற்பட்ட பாரிய மண்சரிவில் சிக்கி 11 பேர் உயிரிழந்துள்ளதாக இந்தோனேசிய அனர்த்த முகாமைத்துவ நிறுவனம் (NDMA) தெரிவித்துள்ளது.

கடந்த வியாழக்கிழமை (நவ 13) சிலாகாப் நகரில் ஏற்பட்ட மண்சரிவில், சிபியூனிங் (Cibunian) கிராமத்தில் உள்ள பல வீடுகள் மண்ணுக்குள் புதைந்துள்ளன.

மண்சரிவில் சிக்கியவர்கள் 3 முதல் 8 மீட்டர் (10-25 அடி) ஆழத்தில் புதைந்திருந்ததால் மீட்புப் பணி மிகவும் சவாலானதாக மாறியுள்ளது.

நேற்று மூன்று பேரும் இன்று எட்டு பேருமாக மொத்தமாக 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

மீட்புப் பணியாளர்கள் காணாமல் போன மேலும் 12 பேரைத் தேடி வருவதாக NDMA இன் செய்தித் தொடர்பாளர் அப்துல் முஹாரி ராய்ட்டர்ஸிடம் தெரிவித்தார்.

தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேசியாவில் மழைக்காலம் செப்டம்பர் மாதம் ஆரம்பித்து ஏப்ரல் மாதம் வரை நீடிப்பதால், வெள்ளப்பெருக்கு மற்றும் அதிகளவான மழை பெய்யும் என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டின் ஆரம்பத்தில், ஜனவரி மாதத்தில் மத்திய ஜாவா நகரமான பெக்கலோங்கனில் (Pekalongan) பெய்த மழையால் ஏற்பட்ட மற்றொரு மண்சரிவில் சிக்கி சுமார் 25 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version