LA 2028 ஒலிம்பிக்: வெறும் 28 டொலர்களுக்கு நுழைவுச்சீட்டு – முன்பதிவு இன்று முதல் ஆரம்பம்!

download 1 1

2028 ஆம் ஆண்டு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளுக்கான நுழைவுச்சீட்டு முன்பதிவு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

ஒலிம்பிக் வரலாற்றில் முதல் முறையாக 10 லட்சம் நுழைவுச்சீட்டுக்கள் வெறும் 28 அமெரிக்க டொலர்கள் (சுமார் 8,500 ரூபாய்) என்ற மிகக்குறைந்த விலையில் விற்பனை செய்யப்படவுள்ளன.

மொத்த நுழைவுச்சீட்டுக்களில் மூன்றில் ஒரு பகுதி 100 டொலருக்கும் குறைவான விலையிலேயே இருக்கும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

ஆர்வமுள்ள விளையாட்டு ரசிகர்கள் ஜனவரி 14 முதல் மார்ச் 18, 2026 வரை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (tickets.la28.org) பதிவு செய்யலாம். இது ஒரு ‘சீரற்ற குலுக்கல்’ முறையாகும்.

முன்கூட்டியே பதிவு செய்வதால் எந்த முன்னுரிமையும் கிடைக்காது.

மார்ச் 18 க்குள் பதிவு செய்யும் அனைவருக்கும் சமமான வாய்ப்பு உண்டு.

குலுக்கலில் தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு ஏப்ரல் மாதம் மின்னஞ்சல் மூலம் அறிவிக்கப்பட்டு, நுழைவுச்சீட்டுக்கள் வாங்குவதற்கான ஒரு குறிப்பிட்ட நேர ஒதுக்கீடு வழங்கப்படும்.

தொடக்க விழா மற்றும் தடகளப் போட்டிகள் புகழ்பெற்ற LA மெமோரியல் கொலிசியம் மைதானத்தில் நடைபெறும்.

படகுப் போட்டிகள் மட்டும் ஒக்லஹோமா நகரில் நடத்தப்படவுள்ளன.

மாற்றுத்திறனாளிகளுக்கான பராலிம்பிக் போட்டிகளுக்கான நுழைவுச்சீட்டு விற்பனை 2027 ஆம் ஆண்டு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

Exit mobile version