இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார, மீண்டும் இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடரில் ராஜஸ்தான் ரோயல்ஸ் (Rajasthan Royals) அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி, சங்கக்காராவின் நியமனத்தை அறிவிக்கும் விதமாக, ஒரு சிறப்பு AI காணொளியை வெளியிட்டுள்ளது.
அந்தக் காணொளியில், சமீபத்தில் வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் சிற்றூந்தில் இருந்து இறங்கி நடந்துவரும் புகழ்பெற்ற காட்சியை, AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திச் சங்கக்கார நடந்து வருவது போல எடிட் செய்து வெளியிட்டுள்ளனர்.
இந்த உற்சாகமான மற்றும் புதுமையான அறிவிப்பு, கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது.