நாட்டின் மறுசீரமைப்புப் பணிகளுக்காகத் தங்களது ஒரு நாள் சம்பளத்தை நன்கொடையாக வழங்கி, ஹட்டன் – பொகவந்தலாவை, கொட்டியாக்கலை தோட்டத் தொழிலாளர்கள் முன்மாதிரியாகச் செயற்பட்டுள்ளனர்.
கொட்டியாக்கலை தோட்டத்தின் N.C. பிரிவைச் சேர்ந்த பெருந்தோட்டத் தொழிலாளர்கள் இணைந்து, தங்களது கடின உழைப்பின் மூலம் ஈட்டிய 108,000 ரூபாயை ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்காக வழங்கியுள்ளனர்.
சேகரிக்கப்பட்ட இந்த நிதித் தொகையானது தேசிய மக்கள் சக்தியின் (NPP) நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான மஞ்ஜுள சுரவீர ஆரச்சி மற்றும் கிருஷ்ணன் கலைச்செல்வி ஆகியோரிடம் உத்தியோகப்பூர்வமாகக் கையளிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் தற்போதைய இக்கட்டான சூழலில் முன்னெடுக்கப்படும் மறுசீரமைப்பு முயற்சிகளுக்கு வலுசேர்க்கும் நோக்குடன் இந்த நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும், தேசத்தைக் கட்டியெழுப்பும் பணிக்காகத் தோட்டத் தொழிலாளர்கள் காட்டிய இந்த அர்ப்பணிப்பு பலரது பாராட்டுகளையும் பெற்றுள்ளது.

