கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: யாழ்ப்பாணம் மானிப்பாயில் பெண் உட்பட 3 சந்தேகநபர்கள் கைது!

25 690f41c5a622b

கொழும்பு – கொட்டாஞ்சேனைப் பகுதியில் நேற்று (நவம்பர் 8) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில், மூன்று சந்தேகநபர்கள் யாழ்ப்பாணம் – மானிப்பாய் பகுதியில் தலைமறைவாகியிருந்த நிலையில் இன்று (நவம்பர் 9) கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் ஒரு பெண் ஒருவரும் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கொட்டாஞ்சேனைப் பகுதியில் நேற்று கார் ஒன்றில் வந்த நபர்கள் துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டுத் தப்பிச் சென்றிருந்தனர்.

இந்தச் சம்பவத்தில் ஒழுங்கமைக்கப்பட்ட குழு ஒன்றின் உறுப்பினர் எனக் கூறப்படும் பாலச்சந்திரன் புஷ்பராஜ் என்ற நபர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

Exit mobile version