கசகஸ்தான் – இலங்கை இடையிலான புதிய நேரடி விமான சேவைகளை ஆரம்பிக்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன எனத் தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி கஜகஸ்தான் எயார் அஸ்தனா விமான சேவை எதிர்வரும் டிசெம்பர் மாதம் முதல் இலங்கைக்கான திட்டமிடப்பட்ட சேவையை முன்னெடுக்கவுள்ளது.
எதிர்வரும் டிசெம்பர் முதல் செவ்வாய்க்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை அல்மாட்டிலிருந்த கொழும்புக்கு வாரத்துக்கு இருமுறை இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
விமானம் கஜகஸ்தான் அல்மாட்டியில் இருந்து அதிகாலை 5.30 மணிக்கு புறப்பட்டு முற்பகல் 11.30 மணிக்கு கொழும்பை வந்தடையும்.
பின் கொழும்பில் இருந்து திரும்பும் விமானம் பிற்பகல் 12.30 மணிக்கு புறப்பட்டு இரவு 7.40 மணிக்கு அல்மாட்டியை அடையும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
#SrilankaNews