24
இந்தியாசெய்திகள்

“உங்கள் பசிக்கு இன்னும் எத்தனை உயிர்கள்?”: அது போலி கணக்கு – பிரபல நடிகை விளக்கம்

Share

எனது பெயரில் பதிவுகளைப் பரப்பும் ட்விட்டர் கணக்கு போலியானது என்று நடிகை கயாடு லோஹர் விளக்கம் அளித்துள்ளார்.

கரூர் துயர சம்பவம் குறித்து பிரபலங்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் வேதனை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் நடிகை கயாடு லோஹரின் எக்ஸ் தளத்தில் கணக்கில் வெளியான பதிவு எதிர்வினைகளைத் தூண்டியது.

ஏனெனில், அந்த பதிவில் ‘சுயநல அரசியலுக்காக கரூரில் தனது நண்பர்களில் ஒருவரை இழந்ததாகவும், விஜய் உங்கள் நட்சத்திர அந்தஸ்துக்கு மக்கள் துணையாக இல்லை; உங்கள் பசிக்கு இன்னும் எத்தனை உயிர்கள்?’ என்றும் கூறப்பட்டிருந்தது.

இந்த நிலையில் கயாடு தனது உண்மையான எக்ஸ்தள பக்கத்தில் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.

அவர், “எனது பெயரில் பதிவுகளைப் பரப்பும் ட்விட்டர் கணக்கு போலியானது. எனக்கும் அதற்கும் எந்த தொடர்பும் இல்லை. மேலும் அங்கு வெளியிடப்பட்ட அறிக்கைகள் என்னுடையவை அல்ல. கரூர் பேரணியில் நடந்த துயர சம்பவத்தால் நான் மிகவும் வருத்தமடைந்தேன், மேலும் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு எனது மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இருப்பினும், கரூரில் எனக்கு தனிப்பட்ட நண்பர்கள் யாரும் இல்லை என்பதையும், என் பெயரில் பரப்பப்படும் கதை தவறானது என்பதையும் நான் மிகத் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

இந்த தவறான தகவலை நம்பவோ அல்லது பரப்பவோ வேண்டாம். மீண்டும் ஒருமுறை, துக்கத்தில் இருக்கும் குடும்பங்களுடன் எனது பிரார்த்தனைகள்” என தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
30
இலங்கைசெய்திகள்

எரிபொருள் விலையில் இன்று ஏற்படவுள்ள மாற்றம்

நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள எரிபொருளின் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. மாதாந்த எரிபொருள்...

29
இலங்கைசெய்திகள்

மகிந்தவை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ரணில்

ரணிலும் நானும் பரஸ்பர மரியாதையை பேணக்கூடிய அரசியல் கலாசாரத்தை கொண்டவர்கள் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த...

28
இலங்கைசெய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான தகவல்கள் வெளிவருவதைத் தடுக்க அரசாங்கம் சதி! முஜிபுர் ரஹ்மான்

பாதுகாப்பு பிரதியமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை நிராகரித்ததன் மூலம் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான தகவல்கள்...

27
இந்தியாசெய்திகள்

போனில் பேசிய ராகுல் காந்தி – வீட்டை விட்டு வெளியேறிய விஜய் எங்கே சென்றார்?

36 மணி நேரங்களுக்கு பின்னர் தவெக தலைவர் விஜய் தனது வீட்டை வெளியேறியுள்ளார். கரூரில் தவெக...