கச்சதீவு அந்தோனியார் ஆலயத் திருவிழா பெப்ரவரி 27, 28 இல்: யாழ். மாவட்டச் செயலகத்தில் விசேட தீர்மானம்!

Katchatheevu festival 2024 0

வரலாற்றுச் சிறப்பு மிக்க கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்தத் திருவிழாவை முன்னிட்டு, அதற்கான முதற்கட்டக் கலந்துரையாடல் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் இன்று (08) நடைபெற்றது.

எதிர்வரும் பெப்ரவரி 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் திருவிழா நடைபெறவுள்ளது.

இலங்கை மற்றும் இந்தியப் பக்தர்கள் பெருமளவில் கலந்துகொள்ளும் இத்திருவிழாவைச் சிறப்பாக நடத்துவதற்குத் தேவையான முன்னாயத்தங்களை மேற்கொள்ளுமாறு துறைசார் திணைக்களங்களுக்கு அரசாங்க அதிபர் பணிப்புரை விடுத்துள்ளார்.

இக்கூட்டத்தில் யாழ்ப்பாண மறைமாவட்ட குரு முதல்வர், இந்தியத் துணைத் தூதரக அதிகாரி இ. நாகராஜன், மற்றும் வடமாகாணக் கடற்படைத் தளபதி ரியல் அட்மிரல் புடிக்ஹ லியனகமகே ஆகியோர் கலந்துகொண்டனர்.

கச்சதீவு மனிதர்கள் வசிக்காத தனித்தீவாக இருப்பதால், குடிநீர், சுகாதாரம் மற்றும் போக்குவரத்து வசதிகள் குறித்துக் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும்.

கடந்த ஆண்டு ஏற்பாடுகளில் ஏதேனும் குறைபாடுகள் இருந்திருப்பின், அவற்றை இம்முறை நிவர்த்தி செய்து, விழாவைப் புனிதமாகவும் சிறப்பாகவும் நடத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

இரு நாட்டுப் பக்தர்களும் கடல் மார்க்கமாக வருகை தருவதால், கடற்படையினரின் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்படும்.

 

 

Exit mobile version