13
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கச்சதீவு திருவிழா பிப்ரவரி 27-இல் கொடியேற்றம்! – 8,000 பக்தர்கள் பங்கேற்க விரிவான ஏற்பாடு.

Share

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் 2026-ஆம் ஆண்டுக்கான வருடாந்த திருவிழா வரும் பிப்ரவரி 27 மற்றும் 28-ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது. இதற்கான இறுதிக்கட்ட முன்னேற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு குறித்த ஆலோசனைக் கூட்டம், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் இலங்கை கடற்படை அதிகாரிகள், இந்தியத் தூதரகப் பிரதிநிதிகள் மற்றும் யாழ் மறைமாவட்ட குருக்கள் கலந்துகொண்டு, பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தினர்.

இந்த ஆண்டு திருவிழாவில் இலங்கை மற்றும் இந்தியாவிலிருந்து தலா 4,000 பேர் என மொத்தம் 8,000 பக்தர்கள் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 27-ஆம் தேதி மாலை 4:00 மணிக்குத் திருவிழாக் கொடியேற்றத்துடன் தொடங்கி, சிலுவைப் பாதை மற்றும் நற்கருணை ஆசீர்வாதம் ஆகிய நிகழ்வுகள் நடைபெறும். மறுநாள் பிப்ரவரி 28 காலை 7:30 மணிக்கு யாழ் மறைமாவட்ட ஆயர் மற்றும் இந்தியக் குருக்கள் இணைந்து நடத்தும் கூட்டுத் திருப்பலியுடன் திருவிழா நிறைவுபெறவுள்ளது. இந்தியாவிலிருந்து வரும் பக்தர்கள் ராமேஸ்வரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து விசைப்படகுகள் மூலம் கச்சதீவுக்கு வருகை தரவுள்ளனர்.

பக்தர்களின் வசதிக்காகக் குடிநீர், தங்குமிடக் கூடாரங்கள், சுகாதாரம் மற்றும் கழிவறை வசதிகளை இலங்கை கடற்படை முன்னின்று கவனித்து வருகிறது. யாழ்ப்பாணத்திலிருந்து குறிகட்டுவான் இறங்குதுறை வரை விசேட பேருந்து சேவைகளும், அங்கிருந்து கச்சதீவுக்குப் படகுச் சேவைகளும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன. தீவுப் பகுதியில் சமைப்பது, மதுபானம் அருந்துவது மற்றும் புகைப்பிடித்தல் ஆகியவற்றுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதோடு, பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைப்பதற்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பக்தர்களின் பாதுகாப்பிற்காக விசேட மருத்துவ முகாம்களும், கடற்படையின் உயிர் காக்கும் பிரிவினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

 

Share

Recent Posts

தொடர்புடையது
05 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வரி செலுத்துவோருக்கு ‘கோல்ட், சில்வர்’ கார்டு: உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிமுகப்படுத்திய புதிய அதிரடி சலுகைத் திட்டம்!

நாட்டின் வரி செலுத்தும் கலாசாரத்தில் நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில், தமது வரிப் பொறுப்புக்களைத் துல்லியமாகவும்,...

04 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கிவுல் ஓயா திட்டம்: நில அபகரிப்பிற்கு எதிரான கூட்டுப் போராட்டம் – யாழ். ஊடக அமையத்தில் சிவில் சமூகம் தீர்மானம்!

யாழ். ஊடக அமையத்தின் ஒழுங்கமைப்பில் ‘கிவுல் ஓயா அபாயத்தின் குறியீடா?’ என்ற தலைப்பிலான முக்கியத்துவமிக்க திறந்த...

03
செய்திகள்இந்தியா

இலங்கைத் தமிழர்களுக்கு நிரந்தரக் குடியிருப்புகள்: தமிழக அரசின் குரல் என்றும் ஒலிக்கும் – முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி!

தமிழகத்தில் உள்ள பல்வேறு முகாம்களில் வசிக்கும் இலங்கைத் தமிழ் ஏதிலிகளின் நலனைப் பேணுவதிலும், அவர்களின் வாழ்வாதாரத்தை...

02
செய்திகள்உலகம்

2 நாட்களில் பயணம்: நிலவில் சுயசார்பு நகரம் அமைக்க ஈலோன் மஸ்க் அதிரடி திட்டம்!

உலகின் முன்னணி விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX) தலைவர் ஈலோன் மஸ்க், செவ்வாய் கிரகத்திற்கு...