இந்தியாவில், கர்நாடக மாநில அரசு, மாதவிடாய்க் காலத்தில் பெண் ஊழியர்களுக்குச் சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. இதன் மூலம் அத்தகைய விடுப்பு வழங்கும் முதல் தென்னிந்திய மாநிலமாக கர்நாடகா திகழ்கிறது.
யாருக்குப் பொருந்தும்: புதிய அறிவிப்பின் கீழ், அரசாங்க மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை செய்யும் 18 முதல் 52 வயது வரையிலான பெண்கள் இந்த விடுப்பை எடுத்துக் கொள்ளலாம்.
பெண்கள் மாதத்தில் ஒரு நாள் மாதவிடாய் விடுப்பு எடுத்துக்கொள்ளலாம்.
இந்த விடுப்பைப் பெறுவதற்கு மருத்துவச் சான்றிதழ் கொடுக்கத் தேவையில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்திட்டம் அதிகாரபூர்வமற்ற இதர துறைகளுக்கும் (Unorganized sectors) விரிவுபடுத்தப்பட வேண்டும் என்று நிபுணர்கள் கர்நாடக அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொண்டுள்ளனர்.
மாதவிடாய் விடுப்பு என்பது புதிதல்ல. ஸ்பெயின், ஜப்பான், தென்கொரியா, இந்தோனேசியா ஆகிய நாடுகளில் இது ஏற்கனவே அமலில் இருக்கிறது.
இந்தியாவில், பீகார் மற்றும் ஒடிசா போன்ற சில மாநிலங்கள் மட்டுமே கட்டுப்படுத்தப்பட்ட மாதவிடாய்க் கால விடுப்புகள் வழங்குகின்றன. இந்த மாநிலங்கள் அரசாங்க ஊழியர்களுக்கு மட்டும் மாதத்தில் 2 நாள்கள் விடுப்பு வழங்குகின்றன.