திட்டமிட்டபடி மாவீரர் நினைவேந்தல் நடைபெறும் என்று மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி நீதிமன்றத்தில் மாவீரர் நினைவேந்தலுக்கு வழங்கப்பட்ட தடையுத்தரவு தொடர்பில் நகர்த்தல் பிரேரணையின் வழக்கு நடைபெற்றது.
இவ் வழக்கைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,
மாவீரர் நினைவேந்தலை நீதிமன்றம் தடுத்தது போன்று தெரயவில்லை. வழக்கின் முடிவு அஞ்சலி செய்வதற்கான சாதகமாகன தீர்ப்பிணையே கொண்டுள்ளது – என்றார்.
தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
நீதிபதிகளின் தீர்ப்பின் அடிப்படையில் மாவீரர்களுக்கான அஞ்சலியை அவர்கள் தடுக்கவில்லை என கருதுகிறேன். ஆனால் ஏனைய நீதிபதிகளின் தீர்ப்புக்கு எதிராகவே காணப்படுகிறது.
இருப்பினும் நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி நினைவேந்தலுக்கு தடை வழங்கப்பட்டதாக தெரியவில்லை. எனவே அஞ்சலி நிகழ்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் – என்றார்.
#SriLankaNews