நட்பு நாடுகளுக்கு நிதியுதவியை அதிகரிக்கப் போவதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார்.
ரோமில் சரக்கு வினியோகச் சங்கிலி தொடர்பான கருத்தரங்கில் உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் நாட்டின் பாதுகாப்புக்குத் தேவையானவற்றை கையிருப்பு வைத்துக் கொள்ளும்படி கூறிய அவர், அமெரிக்கத் துறைமுகங்களில் இருந்து சரக்குக் கப்பல்கள் விரைவில் வெளியேறவும் உள்ளே வரவும் நடைமுறைகளை எளிமைப்படுத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ஒரு நாட்டில் ஏதேனும் பிரச்சினை எழுந்தால், ஏனைய நாடுகளின் உதவியுடன் அதனைத் தீர்க்கலாம் என்றும் பரஸ்பர ஒத்துழைப்பு அவசியம் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
#world