போலி ஆவணங்களைப் பயன்படுத்திச் சட்டவிரோதமாகப் பதிவு செய்யப்பட்ட ஒரு ஜீப் வாகனம், குருணாகல் பன்னல, எலபடகம பிரதேசத்தில் வைத்து மத்திய காவல்துறை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் (Central Police CID) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த ஜீப் வாகனத்தை மாத்தளைப் பிரதேசத்தில் உள்ள நபரொருவரிடம் இருந்து கொள்வனவு செய்ததாக அதன் உரிமையாளர் காவல்துறையினரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
காவல்துறையின் விசாரணையில், இந்த ஜீப் வாகனம் சுமார் 10 வருடங்களுக்கு முன்னர் போலி ஆவணங்களைப் பயன்படுத்திச் சட்டவிரோதமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
ஜீப் வாகனத்தை விற்பனை செய்த மாத்தளைப் பிரதேசத்தில் உள்ள நபர் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மத்திய காவல்துறை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.