ஜப்பானில் கழிவறை நீரை குடிநீராகப் பயன்படுத்திய சம்பவம் ஒரு இடம்பெற்றுள்ளது.
ஜப்பானில் உள்ள மருத்துவமனை ஒன்றில், தவறுதலாக, கழிவறை நீரை 30 ஆண்டுகளுக்கும் மேலாக குடிநீராகப் பயன்படுத்தி உள்ளதாக அந்நாட்டு செய்தி நிறுவனமென்று செய்தி வெளியிட்டுள்ளது.
யோமுயிரி ஷிம்புன் என்ற செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியில்,
ஒசாமா பல்கலைக்கழக வைத்தியசாலையில், சில குடிநீர் குழாய்கள், கழிவறை குழாயுடன் தவறுதலாக இணைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது, குடிநீர் குழாய்களை இணைக்கும் பணியின்போது, அது தவறுதலாக, கழிவறையிலிருந்து வெளியேறும் கழிவுநீர் குழாய்களோடு இணைக்கப்பட்டுள்ளது.
கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு முன்பு வைத்தியசாலையைக் கட்டி திறப்பதற்கு முன்பே இந்த தவறு நடந்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
அந்த கட்டடத்தில் சில சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள ஆய்வு செய்தபோதுதான், இதுவரை பாதுகாப்பற்ற தண்ணீரை குடிநீராக வைத்தியசாலை பயன்படுத்தி வந்தது தெரிய வந்துள்ளது.
இது தொடர்பாக வைத்தியசாலை நிர்வாகம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டுள்ளது .
வைத்தியசாலை குடிநீரை பயன்படுத்தியவர்களுக்கு உடல்நலப் பாதிப்புகள் ஏற்பட்டால் அதற்கு வைத்தியசாலை சார்பில் இலவசமாக சிகிச்சையளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#world