இலங்கைக்கான புதிய ஜப்பான் தூதுவர் மிசிகொஷி ஹெதெகி இலங்கையில் பயிற்சி பெற்ற பணியாளர்களை பணியில் ஈடுபடுத்துவதற்கு ஜப்பான் அரசாங்கம் ஆர்வமாக இருப்பதாக தெரிவித்தார்.
இன்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை அலரி மாளிகையில் சந்தித்த போதே அவர் இதனை தெரிவித்தார்.
திறன் மற்றும் நிபுணத்துவம் கொண்ட பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்தல் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இலங்கையிலிருந்து ஜப்பானுக்கு 14 துறைகளின் கீழ் பணியாளர்களை சேவையில் இணைத்துக் கொள்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தார்.
75 ஜப்பானிய முதலீட்டு நிறுவனங்கள் இலங்கையில் செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
தமது பதவிக் காலத்திற்குள் இந்நாட்டின் முதலீட்டை மேம்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்துவதற்கு ஆர்வமாக உள்ளதாக மிசிகொஷி ஹெதெகி தெரிவித்தார்.
#SriLankaNews