இந்தோனேசியத் தலைநகர் ஜகார்த்தாவில் ரேபிஸ் (Rabies) நோய் பரவுவதைத் தடுக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, நாய், பூனை மற்றும் வௌவால் இறைச்சி விற்பனை மற்றும் உட்கொள்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அந்நகர ஆளுநர் அறிவித்துள்ளார்.
இந்தத் தடை உத்தரவானது ஜகார்த்தா ஆளுநர் பிரமோனோ அனுங் விபோவோவால் (Pramono Anung Wibowo) கையெழுத்திடப்பட்டுள்ளது.
ரேபிஸ் நோயைக் கடத்தக்கூடிய விலங்குகளின் இறைச்சியை உட்கொள்வதையும், விற்பனை செய்வதையும் தடுப்பதே இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கமாகும்.
இந்தோனேசியாவில் நாய் இறைச்சியை ஒழிப்பதற்கான ஆர்வலர் குழு (Dog Meat Free Indonesia) இந்தத் தடையை உடனடியாக வரவேற்றுள்ளது.
அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தக் கொள்கை “அனைத்து இந்தோனேசிய மக்களைப் பாதுகாப்பதற்கும், நீதியான மற்றும் நாகரிகமான தேசமாக மாறுவதற்கும் உதவும்” என்று தெரிவித்துள்ளனர்.