Jeevan Thondaman
செய்திகள்இலங்கை

பிரதமர் மீதான தனிநபர் தாக்குதல்கள் கண்டிக்கத்தக்கவை – நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி அதிரடி!

Share

பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவை இலக்கு வைத்து முன்னெடுக்கப்படும் தனிநபர் மற்றும் பாலின ரீதியான வன்முறைத் தாக்குதல்களைத் தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி வன்மையாகக் கண்டித்துள்ளார்.

தமது உத்தியோகபூர்வ முகநூல் (Facebook) பதிவின் மூலம் அவர் பிரதமரின் ஆளுமையைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் வகையில் நடத்தப்படும் தனிநபர் விமர்சனங்கள் மற்றும் பாலின அடிப்படையிலான இழிவுபடுத்தல்கள் நாகரீகமற்றவை.

அண்மையில் தரம் 06 பாடப்புத்தகத்தில் கண்டறியப்பட்ட தவறு குறித்து அரசாங்கம் பொறுப்புடன் நடந்துகொண்டது. அந்தத் தவறை வெளிப்படையாக ஒப்புக்கொண்டதுடன், அது குறித்து முறையான காவல்துறை விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

தவறை மறைக்காமல், அதனைச் சீர்செய்ய நடவடிக்கை எடுப்பது ஒரு பொறுப்புள்ள மற்றும் வெளிப்படையான அரசாங்கத்தின் அடையாளம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசாங்கத்தின் குறைபாடுகளைச் சுட்டிக்காட்டுவதற்குப் பதிலாக, தனிப்பட்ட முறையில் பிரதமரைத் தாக்குவது முறையற்றது எனவும், இவ்வாறான நேர்மறையான மாற்றங்களை மக்கள் ஆதரிக்க வேண்டும் எனவும் அவர் தனது பதிவில் வலியுறுத்தியுள்ளார்.

 

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...