நாட்டில் நிலவும் மழையுடனான வானிலையின் மத்தியில், யாழ்ப்பாணம் – அச்சுவேலி பகுதியிலேயே அதிகளவான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அச்சுவேலியில் 112.8 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. இதற்கு அடுத்தபடியாக, நயினாதீவில் 112.5 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது அதிகரித்து வீசக்கூடும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.
காலியிலிருந்து மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாகப் பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 55 முதல் 60 கிலோ மீட்டர் வரை வீசக்கூடும்.
திருகோணமலையிலிருந்து காங்கேசன்துறை, மன்னார் மற்றும் கொழும்பு ஊடாகக் காலி வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 முதல் 55 கிலோ மீட்டர் வரை வீசும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலியிலிருந்து மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாகப் பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.