ஜேர்மன் ஜனாதிபதி ஏஞ்சலா மெர்கல் அம்மையாருக்கு டாக்டர் பட்டம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளது.
ஜேர்மன் ஜனாதிபதியாக இருக்கும் அவரது பதவிக் காலம் இன்னும் சில நாட்களில் நிறைவடையவுள்ள நிலையில், ஜெருசலேமில் அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 16 வருடங்களாக ஜேர்மனின் ஜனாதிபதியாகப் பதவியில் இருந்த ஏஞ்சலா மெர்கல், மரியாதையின் நிமித்தம் இஸ்ரேல் ஜனாதிபதியைச் சந்தித்தார்.
இதன்போது ஏஞ்சலா மெர்கலை ‘யூத மக்களின் சிறந்த நண்பர்’ என்று இஸ்ரேல் ஜனாதிபதி பாராட்டினர்.
அத்துடன் அவருக்கு இஸ்ரேல் தொழில்நுட்ப நிறுவனம் டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்தது.
இதேவேளை, கடந்த வாரம் ஜேர்மனி அருங்காட்சியகத்தில் ஏஞ்சலா மெர்கலின் சிலை திறந்து வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.