பிணைக்கைதிகள் உடல்கள் ஒப்படைப்பைத் தொடர்ந்து: 45 பலஸ்தீனர்களின் உடல்களை இஸ்ரேல் விடுவித்தது! 

25 6909005a2a5b7

ஹமாஸிடமிருந்து மூன்று இஸ்ரேலியப் பிணைக்கைதிகளின் உடல்கள் ஒப்படைக்கப்பட்டதைத் தொடர்ந்து, இஸ்ரேல் 45 பலஸ்தீனர்களின் உடல்களை ஒப்படைத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதனை காஸா அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஒவ்வொரு பிணைக்கைதிகள் உடல்கள் விடுவிக்கப்படும் போதும், இஸ்ரேல் தரப்பிடமிருந்து 15 பலஸ்தீனர்களின் உடல்கள் விடுவிக்கப்பட்டு வருகின்றன. இதன் அடிப்படையில், இதுவரை மொத்தம் 270 பலஸ்தீனர்களின் உடல்களை இஸ்ரேல் ஒப்படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஹமாஸிடமிருந்து ஒப்படைக்கப்பட்ட மூன்று பிணைக்கைதிகளின் உடல்களும், கடந்த 2023 இல் அப்படையினரால் நடத்தப்பட்ட தாக்குதல்களில் கொல்லப்பட்ட இஸ்ரேல் வீரர்கள் மூவரது உடல்கள் என இஸ்ரேலிய அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளனர்.

கடந்த ஒக்டோபர் பத்தாம் திகதி காஸா போர்நிறுத்த ஒப்பந்தம் நடைமுறையானதிலிருந்து ஹமாஸிடமிருந்து இதுவரை 20 பிணைக்கைதிகளின் உடல்கள் இஸ்ரேலிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. மேலும், எட்டு உடல்கள் இன்னும் ஹமாஸிடம் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version