இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையில் போர் ஆரம்பித்ததிலிருந்து இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 70,100-ஐ அண்மித்துள்ளதாக காஸா சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
ஒக்டோபர் 10ஆம் திகதி போர் நிறுத்தம் அமுலுக்கு வந்த போதிலும், அவ்வப்போது இஸ்ரேல் வீரர்கள் காஸா மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
போர் நிறுத்தம் அமுலுக்கு வந்த பிறகும் இஸ்ரேல் இராணுவத்தின் தாக்குதலில் மட்டும் 352 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
தற்போது போர் பதற்றம் சற்றுத் தணிந்துள்ளதால், இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியிருந்த உடல்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் கணக்கிடப்பட்ட இறப்பு எண்ணிக்கையில் பெரும்பகுதி, இடிபாடுகளிலிருந்து மீட்கப்பட்டு அடையாளம் காணப்பட்ட உடல்கள் மூலமே உயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெற்கு காஸா மீது இஸ்ரேல் இராணுவம் நேற்று (நவம்பர் 30) நடத்திய ட்ரோன் தாக்குதலில் 11 வயது மற்றும் 8 வயதுடைய இரு சகோதரர்கள் உயிரிழந்துள்ளனர்.இந்தத் தாக்குதல் தொடர்பாக இஸ்ரேல் இராணுவம் எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.

