தோற்றத்தை மாற்றிய இஷாரா செவ்வந்தி: காவல்துறை தகவல்

25 68f237ebdbf18

கணேமுல்ல சஞ்சீவ படுகொலை வழக்கின் முக்கிய சூத்திரதாரியான இஷாரா செவ்வந்தி, கொழும்பு நீதவான் நீதிமன்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தின் பின்னர் தனது தோற்றத்தை மாற்றிக்கொண்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

நேபாளத்தில் அவருடன் கைது செய்யப்பட்ட ‘தக்சி’ என்ற தமிழ் பெண்ணைப் போலவே தனது தோற்றத்தை மாற்றிக்கொள்ள, நீண்ட நாட்களாக அங்குள்ள அழகு நிலையங்களுக்கும் அவர் சென்றிருந்ததாகக் கூறப்படுகிறது.

வெளிநாட்டில் வசித்து வரும் ஒரு பாதாள உலகத் தலைவர், சுமார் ஒரு மாதம் வரை செவ்வந்தி தங்குவதற்குத் தேவையான வசதிகளைச் செய்து கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. தனது பாதாள கும்பல் உறுப்பினர்களைப் பயன்படுத்தி அவர் இந்த உதவிகளை செவ்வந்திக்கு வழங்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பாதாள உலகத் தலைவர், ‘கெஹெல்பத்தர பத்மே’ என்பவரின் நெருங்கிய நண்பர் என்பது விசாரணைகளில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

நேபாளத்தில் வசிக்கும்போது தனது தோற்றத்தில் அதிக கவனம் செலுத்தி வந்ததாக செவ்வந்தி கூறியுள்ளார். அழகு நிலையங்களில் தனது பெரும்பாலான நேரத்தைச் செலவிட்டதாகவும், பணம் சம்பாதிப்பதற்காகவும், அழகு தொடர்பான வேலைகளில் ஈடுபடுவதன் மூலமும் நேரத்தைச் செலவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தனது தோற்றத்தில் காணக்கூடிய முன்னேற்றங்களைக் கவனித்த பிறகு, அழகு சிகிச்சைகளுக்கு “அடிமையாக” மாறியதாக அவர் ஒப்புக்கொண்டுள்ளார். மேலும் பல மாதங்களாக தனது தோற்றம் அடையாளம் காண முடியாத அளவுக்கு மாறிவிட்டதை தான் உணர்ந்ததாகவும் இஷாரா தெரிவித்துள்ளார்.

விசாரணையின்போது, காத்மாண்டுவில் ‘கம்பஹா பாபா’, ‘ஜே.கே. பாய்’, மற்றும் ‘ஜம்புகஸ்முல்லா பாபி’ ஆகியோரை சந்தித்ததாகவும், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சுரேஷ் மற்றும் தக்சியையும் அங்கு சந்தித்ததாகவும் அவர் விசாரணை அதிகாரிகளிடம் கூறியுள்ளார்.

 

Exit mobile version