இஷாரா செவ்வந்திக்கு உதவிய குற்றச்சாட்டு: பொலிஸ் கான்ஸ்டபிள் உட்பட மூவர் கைது
கணேமுல்ல சஞ்சீவ படுகொலையின் முக்கிய சூத்திரதாரி எனக் கருதப்படும் இஷாரா செவ்வந்திக்கு உதவிய குற்றச்சாட்டின் பேரில், ஒரு பொலிஸ் கான்ஸ்டபிள், அவரது மனைவியின் தாயார் மற்றும் திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் ‘மதுகம ஷான்’ என்பவரின் நெருங்கிய நண்பர் ஆகிய மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
நீண்ட நாட்களாக தேடப்பட்டு வந்த இஷாரா செவ்வந்தி, அண்மையில் நேபாளத்தில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
அவரிடம் மேற்கொள்ளப்படும் விசாரணைகளின் அடிப்படையில் மேலும் பலர் கைது செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரையில், இஷாரா செவ்வந்தியிடமும் அவருடன் கைது செய்யப்பட்ட பலரிடமும் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.