பிரித்தானிய மகராணியின் கிரீடம் இனி இவருக்கா?

a1e01dd6 f527 41c8 bbda 2443809c76bd 1

இளவரசர் சார்ல்ஸின் முடிசூட்டு விழாவில் பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத் தனது விலைமதிப்பற்ற கிரீடத்தை கார்ன்வாலின் டச்சஸ் கமிலா பார்க்கருக்கு பரிசளிக்கத் தயாராகுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

1937 ஆம் ஆண்டு ஆறாம் ஜார்ஜ் மன்னரின் முடிசூட்டு விழாவுக்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்டது.

இந்த கிரீடத்தில் விலைமதிப்பற்ற கோஹினூர் வைரம் பதிக்கப்பட்டுள்ளது. கிரீடம் 2868 வைரங்கள், 17 நீலமணிகள், 11 மரகதங்கள், 269 முத்துக்கள் மற்றும் 4 கற்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் எலிசபெத் மகாராணியின் கீரிடத்தை அணியகிடைப்பதை தனக்கு கிடைத்த பெரும் கௌரவமாக கருதுவதாக டச்சஸ் கமிலா தெரிவித்துள்ளார்.

இந்த விலைமதிப்பற்ற 85 வயதான அரச கிரீடத்தின் புதிய உரிமையாளராக டச்சஸ் கமிலா இனி விளங்குவார்.
#SriLankaNews

 

 

Exit mobile version