தற்போது நாட்டில் இரும்பின் விலை மேலும் அதிகரித்து காணப்படுவதாக இரும்பு இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட இரும்பு இறக்குமதியாளர்கள் சங்க தலைவர்,
தற்போது இரும்பு மெற்றிக் டன் ஒன்றின் விலையானது 2 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாவாக அதிகரித்துள்ளது.
உலக சந்தையில், இரும்பின் விலை உயர்வு மற்றும் டொலர் பற்றாக்குறை ஆகியன இதற்கான பிரதான காரணிகளாகும் என்று அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதன் காரணமாக பாரிய அசௌகரியங்களுக்கு தாம் முகங்கொடுத்துள்ளதாக, கட்டட நிர்மாணப் பணிகளில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.
#SrilankaNews

