ஹாா்முஸ் நீரிணைப் பகுதியில் ஈரான் கடந்த வாரம் சிறைப்பிடித்த, மாா்ஷல் தீவுகளின் கொடியேற்றப்பட்ட ‘தலாரா’ (Talara) என்ற எண்ணெய்க் கப்பலை தற்போது விடுவித்துள்ளது.
இது குறித்து கொலம்பியா ஷிப் (Columbia Shipmanagement) நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது. எண்ணெய்க் கப்பல் ‘தலாரா’வை ஈரான் விடுவித்துள்ளது.
அதில் இருந்த 21 பணியாளர்களும் பாதுகாப்பாகவும் நல்ல உற்சாகத்துடனும் உள்ளனா். அவா்களது குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. கப்பல் இப்போது வழக்கமான பணிகளைத் தொடரத் தயாராக உள்ளது.
கப்பல், பணியாளா்கள், நிா்வாகிகள் அல்லது உரிமையாளா்கள் மீது ஈரான் எந்தக் குற்றச்சாட்டையும் சுமத்தவில்லை என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் அஜ்மான் துறைமுகத்தில் இருந்து சிங்கப்பூா் நோக்கிச் சென்று கொண்டிருந்த ‘தலாரா’ கப்பலை, ஹாா்முஸ் நீரிணைப் பகுதியில் ஈரான் கடந்த நவம்பர் 14ஆம் திகதி சிறைப்பிடித்தமை குறிப்பிடத்தக்கது.