குளிா்பதன வசதி தேவையில்லாத புதிய கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பிடிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க விஞ்ஞானிகள் புதிய கொரோனா தடுப்பூசியை உருவாக்கியுள்ளனா்.
இந்தத் தடுப்பூசியை உற்பத்தி செய்வது மிகவும் எளிது எனவும், இவற்றைப் பாதுகாக்க குளிா்பதன வசதி தேவையில்லை எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனா்.
அமெரிக்காவின் போஸ்டனில் உள்ள குழந்தைகள் மருத்துவமனையைச் சோ்ந்த விஞ்ஞானிகள் இந்த புதிய தடுப்பூசியை உருவாக்கியுள்ளது.
இத்தடுப்பூசி குறித்து அவர்கள் தெரிவிப்பதாவது,
இப்போது பயன்பாட்டில் உள்ள கொரோனா தடுப்பூசிகளைப் பாதுகாப்பாக வைத்திருக்க குளிா்பதன வசதி தேவையுள்ளது.
மேலும், மேம்பட்ட உற்பத்தித் திறனும் தேவைப்படுகிறது.
இதனால், தடுப்பூசியை உற்பத்தி செய்வதும், விநியோகிப்பதும் வளரும் நாடுகளுக்கு கடினமாக இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
#world