தற்போது நாட்டில் பரவி வரும் டெங்கு, உண்ணி மற்றும் மலேரியா காய்ச்சலை கட்டுப்படுத்துவதற்கு யாழ்ப்பாண மக்கள் அவதானமாக செயற்பட வேண்டும் என யாழ் போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் சி. யமுனானந்தா தெரிவித்தார்.
யாழ் போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.
இது தொடர்பாக மேலும் கருத்து தெரிவித்த அவர்,
உண்ணி காய்ச்சல் ஆரம்பத்தில் கண்டறியப்பட்டால் சிகிச்சை அளித்து பாதுகாக்கலாம். வயல் தோட்டங்களில் மழைக்கு பின்னர் தொற்றும் நோயாக உண்ணி காய்ச்சல் காணப்படுவதாக அவர் தெரிவித்தார்.
மழைக்காலம் என்பதால் டெங்கு காய்ச்சல் பரவலும் அதிகமாக காணப்படுகின்றது. சுற்றுச்சூழல் பாதுகாப்பின் மூலமே அதனை தடுக்கலாம் என தெரிவித்தார்.
அத்தோடு பல வருடங்களின் பின்னர் வெளிநாட்டில் இருந்து வருகை தந்துள்ள ஒருவரிடம் மலேரியா காய்ச்சல் இனங்காணப்பட்டுள்ளதால் மலேரியா காய்ச்சல் பரவும் அபாயமும் இலங்கையில் காணப்படுகின்றது.
ஆகவே, யாழ்ப்பாண மக்கள் மிகவும் அவதானமாக செயற்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.
#SriLankaNews