இந்தோனேஷியாவில் கடந்த ஆண்டு மட்டும் சுமார் 4 லட்சம் தம்பதிகள் விவாகரத்து செய்துள்ள நிலையில், திருமண உறவுகளின் நிலைத்தன்மை குறித்து மத விவகார அமைச்சர் ஒருவர் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். தற்போது அங்கு குடும்பங்களின் நிலைத்தன்மை “மஞ்சள் எச்சரிக்கை நிலையில்” காணப்படுவதாகவும், இது ஆபத்தான நிலையை நோக்கி நகர்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்தோனேஷியாவின் மத விவகார அமைச்சர், நாட்டில் திருமண முறிவு மற்றும் குடும்பத் தகராறுகள் அதிகரித்து வருவதற்குக் குறிப்பிட்ட சில காரணங்களைக் கோடிட்டுக் காட்டினார்:
கையடக்கத் தொலைப்பேசி மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் வெளிநட்பு மற்றும் வஞ்சக உறவுகள் எளிதில் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசி காரணமாக, காதல் தொடர்புகள் வைத்தல் அல்லது துரோகம் செய்வது மிகவும் எளிதாகி விட்டது என்றும் அவர் வலியுறுத்தினார்.
“மக்கள் விழிப்புடன் செயற்படாவிட்டால், இறுதியில் நாமே சமூக ஊடகங்களின் அடிமைகளாகி விடுவோம்,” எனவும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.
அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின்படி, விவாகரத்திற்கான முக்கிய காரணங்களாக தம்பதிகள் இடையிலான மோதல்கள், பொருளாதார அழுத்தம், மற்றும் குடும்ப வன்முறை ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளன என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இதற்குப் பிரதிபலனாக, சீனப் பொருட்கள் மீது அமெரிக்கா விதித்த வரியில் 10 சதவீதத்தை ட்ரம்ப் குறைத்திருந்தார்.
இதனைத் தொடர்ந்தே, அமெரிக்கப் பொருட்களுக்கான 24 சதவீத வரியை ஒரு வருடத்துக்குத் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாகச் சீனா அறிவித்துள்ளது.

