dinamani 2025 11 28 gas8xazv AP25332344411320 750x430 1
செய்திகள்உலகம்

இந்தோனேஷியாவில் புயல் வெள்ளப் பலி 631 ஆக உயர்வு: மீட்புப் பணிகள் தொடர்கின்றன!

Share

இந்தோனேஷியாவின் அசேப் மாகாணம் மற்றும் சுமத்ரா தீவில் கடந்த வாரம் ஏற்பட்ட புயல்கள் மற்றும் கடும் வெள்ளம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 631 ஆக அதிகரித்துள்ளது.

அசேப் மாகாணம் மற்றும் சுமத்ரா தீவில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் புயல்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 631 ஆக உயர்ந்துள்ளது.

பல பகுதிகளில் மண்சரிவுகள் மற்றும் வெள்ளம் காரணமாக மீட்புக் குழுவினரால் மக்களை அணுக முடியாமல் இருப்பதால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தத் திடீர் வெள்ளம் மற்றும் புயல்களால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளது. மக்களின் குடியிருப்புகள், வீதிகள், கட்டிடங்கள் போன்ற உட்கட்டமைப்புகள் பெருமளவில் சேதமடைந்துள்ளன.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகளும் நிவாரண நடவடிக்கைகளும் தொடர்ந்து தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...