இன்று ஆரம்பமாகவுள்ள இந்திய சமுத்திர மாநாடு!!

1638587731 india L

ஐந்தாவது இந்திய சமுத்திர மாநாடு “சுற்றுச்சூழல், பொருளாதாரம் மற்றும் தொற்றுநோய்கள்” என்ற கருப்பொருளின் கீழ் இன்று பிற்பகல் ஆரம்பமாகவுள்ளது.

இம்மாநாட்டில் பங்கேற்பதற்காக இலங்கையிலிருந்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, நேற்று  அபுதாபியை  சென்றடைந்தார்.

அபுதாபி சர்வதேச விமான நிலையத்தில் ஜனாதிபதி மற்றும் அவரது தூதுக்குழுவினரை அபுதாபிக்கான இலங்கை தூதுவர் மல்ராஜ் டி சில்வா மற்றும் அவரது பணிக்குழுவினர் வரவேற்றனர்.

ஜனாதிபதி இன்று (04) காலை இருதரப்பு கலந்துரையாடல்கள் பலவற்றில் கலந்து கொள்ளவுள்ளார்.

” ஐந்தாவது இந்திய சமுத்திர பிராந்திய மாநாட்டில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆரம்ப உரையையும் ஆற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது

Exit mobile version