images 5
இந்தியாசெய்திகள்

போதைப்பொருள் வேட்டை: ஆந்திராவில் பெண் தாதா கைது! பெங்களூரு தொழிற்சாலைகளில் ரூ. 55 கோடி சிக்கியதா?

Share

தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்களை மையமாகக் கொண்டு இயங்கிய பாரிய போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புகளைப் பொலிஸார் முறியடித்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் உயர் ரக கஞ்சா விற்பனை செய்ததாக, ஆந்திரா விஜயநகரத்தைச் சேர்ந்த காடே ரேணுகா (28) என்ற பெண் தாதா கைது செய்யப்பட்டுள்ளார்.

ஒடிசா எல்லையிலிருந்து ‘ஷீலாவதி’ ரக கஞ்சாவை வாங்கி, நர்சிபட்டினம் வழியாகத் தமிழ்நாடு மற்றும் இலங்கைக்குக் கடத்தியது விசாரணையில் தெரியவந்துள்ளது. மென்பொருள் பொறியாளரான இவர், பெங்களூர் மற்றும் கோயம்புத்தூரில் வீடுகளை வாடகைக்கு எடுத்து ஒரு பெரும் கடத்தல் வலையமைப்பை உருவாக்கியுள்ளார்.

இவருடன் சேர்த்து 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 74 கிலோ கஞ்சா, கார் மற்றும் மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஆந்திராவிலிருந்து இலங்கைக்குக் கஞ்சா கடத்தப்படுவது இதுவே முதல் முறை எனப் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

பெங்களூரில் மூன்று போதைப்பொருள் தயாரிப்புத் தொழிற்சாலைகளை மகாராஷ்டிரா போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் கண்டுபிடித்துள்ளனர்.

இச்சோதனையில் ரூ. 55.88 கோடி மதிப்புள்ள 4 கிலோ மெத்தம்பெட்டமைன் மற்றும் 17 கிலோ இரசாயனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. அண்டை மாநில பொலிஸார் வந்து பெங்களூரில் தொழிற்சாலைகளைக் கண்டுபிடிப்பது, கர்நாடகப் பொலிஸாரின் மெத்தனத்தைக் காட்டுவதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன.

இந்த விவகாரம் குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள கர்நாடக உள்துறை அமைச்சர் பரமேஸ்வர், மகாராஷ்டிரா பொலிஸாரின் தகவலை மறுத்துள்ளார்.

“பெங்களூரில் ரூ. 55.88 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் என்பது உண்மையில்லை. அங்கு ரூ. 1.20 கோடி மதிப்பிலான போதைப்பொருள் தயாரிக்கும் இரசாயனங்களே சிக்கின. இன்னும் போதைப்பொருள் தயாரிக்கப்படவில்லை,” என அவர் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழகம், ஆந்திரா மற்றும் கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்களை இணைக்கும் இந்த போதைப்பொருள் கடத்தல் விவகாரம் தற்போது தென்னிந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...