இந்திய பிரதமர் நரேந்திர மோடி தென்னாபிரிக்காவிற்கு விஜயம் செய்யத் தயாராகி வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
தென்னாபிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெறவுள்ள ஜி20 உச்சி மாநாட்டில் இந்திய பிரதமர் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்னாபிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கிலும் ஆப்பிரிக்க கண்டத்திலும் நடைபெறும் முதல் ஜி20 உச்சிமாநாடு இதுவாகும். இம்மாநாடு நவம்பர் 22-23 ஆகிய திகதிளில் நடைபெறவுள்ளது.
ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெறவுள்ள ஜி20 தலைவர்கள் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி நவம்பர் 21 ஆம் திகதி தென்னாபிரிக்காவுக்குச் செல்வார் என்றும், 23 ஆம் திகதி வரை அங்கு தங்குவார் என்றும் இந்திய வெளியுறவு அமைச்சு அறிவித்துள்ளது.