இன்று ஆரம்பமாகிறது உயர்தரப் பரீட்சை: 3.4 இலட்சம் மாணவர்கள் தோற்றுகின்றனர் – விசேட போக்குவரத்து, அனர்த்த முகாமைத்துவ ஏற்பாடுகள்!

25 690f630bd41e6 md

2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை (GCE Advanced Level) இன்று (நவம்பர் 10) நாடு முழுவதும் ஆரம்பமாகிறது. இந்த ஆண்டுப் பரீட்சைக்கு 3,40,525 பரீட்சார்த்திகள் தகுதி பெற்றுள்ளனர்.

பரீட்சையானது எதிர்வரும் டிசம்பர் மாதம் 5ஆம் திகதி வரை நாடு முழுவதிலும் உள்ள 2,362 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளது.

பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்காக விசேட பேருந்து சேவை அமுல்படுத்தப்பட்டுள்ளதாகத் தேசியப் போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் பி.ஏ. சந்திரபால தெரிவித்துள்ளார்.

பரீட்சை நடைபெறும் காலப்பகுதியில் அனர்த்தங்கள் காரணமாக ஏற்படக்கூடிய தடைகளைத் தவிர்ப்பதற்காக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் விசேட வேலைத்திட்டமொன்றை அமுல்படுத்தியுள்ளதாக, அந்த நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் சம்பத் கொட்டுவேகொட குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version