இந்தியா

உலகின் முதல் டிரில்லியனராக மாறப்போகும் எலோன் மஸ்க்

Share
24 8
Share

உலகின் முதல் டிரில்லியனராக மாறப்போகும் எலோன் மஸ்க்

இன்ஃபோமா கனெக்ட் அக்கடமியின்(Informa Connect Academy) அண்மைய பகுப்பாய்வு அறிக்கையின்படி, உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலோன் மஸ்க்(elon musk), 2027 ஆம் ஆண்டில் உலகின் முதல் டிரில்லியனராக இருப்பார் என தெரியவந்துள்ளது.

ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் டெஸ்லாவின் தலைமை நிர்வாக அதிகாரியான எலோன் மஸ்க், 251 பில்லியன் அமெரிக்க டொலர்கள் மதிப்புடையவர் மற்றும் அவரது சொத்துக்கள் ஆண்டுதோறும் 110 சதவீதம் என்ற விகிதத்தில் வளர்ந்து வருவதாக இன்ஃபோர்மா கனெக்ட் அக்கடமி தெரிவித்துள்ளது.

மேலும், அவர் சிஇஓவாக இருக்கும் ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் டெஸ்லா நிறுவனங்களின் மதிப்பு இந்த ஆண்டு 1195 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என இன்ஃபோமா கனெக்ட் அக்கடமி தெரிவித்துள்ளது.

இந்தியாவின் கௌதம் அதானி(gautam adani) 2028 ஆம் ஆண்டில் உலகின் இரண்டாவது டிரில்லியனராக மாறுவார் என்றும், அவரது சொத்து ஆண்டுக்கு 123 சதவீதம் என்ற விகிதத்தில் வளரும் என்றும் இன்ஃபோமா கனெக்ட் அக்கடமி கணித்துள்ளது.

பட்டியலில் மூன்றாவது மற்றும் நான்காவது இடங்களை என்விடியாவின் தலைமை நிர்வாக அதிகாரி ஜென்சன் ஹுவாங்(Jensen Huang) மற்றும் இந்தோனேசிய எரிசக்தி மற்றும் சுரங்கத் துறையில் ஜாம்பவானான பிரஜோகோ பாங்கெஸ்ட்(Prajogo Pangestu) ஆகியோர் உள்ளனர், அவர்கள் 2028 ஆம் ஆண்டில் டிரில்லியனர்களாக மாறுவார்கள் என்று இன்ஃபோமா கனெக்ட் அக்கடமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பட்டியலில் ஆறாவது இடத்தைப் பிடித்திருக்கும் மெட்டா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி மார்க் ஜூக்கர்பெர்க்(Mark Zuckerberg) 2030-ல் டிரில்லியனாகவும், எட்டாவது இடத்தில் இருக்கும் இந்தியாவின் முகேஷ் அம்பானி(Mukesh Ambani) 2033-ஆம் ஆண்டில் டிரில்லியனாகவும் வருவார்கள் என்றும் இன்ஃபோமா கனெக்ட் அக்கடமி கணித்துள்ளது.

இந்தப் பட்டியலில் முதல் 10 டிரில்லியனர்களில் இரண்டு இந்தியர்கள் இருப்பதும், உலகப் பணக்காரர்களின் ஆண்டுப் பொருளாதார வளர்ச்சி விகிதம் மாறாமல் இருக்கும் என்ற அனுமானத்தில் இன்ஃபோமா கனெக்ட் அக்கடமி இந்த ஆய்வு அறிக்கையைத் தயாரித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Share
Related Articles
10
இந்தியாஇலங்கைசெய்திகள்

மோடியின் வருகையின் போது இலங்கையிடம் முன்மொழியப்பட்ட முக்கிய திட்டம் நிலுவையில்..

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை வருகையின் போது, இலங்கையுடன் நில இணைப்புத் திட்டத்தை இந்தியா...

12 3
இந்தியாசெய்திகள்

இந்தியாவில் அடுத்தடுத்து பதிவான இரு நிலநடுக்கங்கள்!

இந்தியாவின் (India) – வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் அடுத்தடுத்து 2 நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள்...

29 1
இந்தியாசெய்திகள்

கச்சதீவு விவகாரம் : தமிழக ஆளுநர் முன்வைத்த குற்றச்சாட்டு

கச்சதீவு விவகாரம் : தமிழக ஆளுநர் முன்வைத்த குற்றச்சாட்டு கச்சதீவில் இந்திய கடற்றொழிலாளர்கள் உரிமை பறிக்கப்பட்டதற்கு...

14
இந்தியாசெய்திகள்

சீமானை கைது செய்ய தமிழக அரசுக்கு அழுத்தம்!

பெரியார் கொள்கைகளுக்கு எதிராக பேசுவதால் என்னை கைதுசெய்ய தி.க.விடம் இருந்து தமிழக அரசுக்கு அழுத்தம் சென்றுள்ளது...