கரூருக்கு சென்ற தமிழக முதல்வர் விஜய், மக்கள் சந்திப்பு நிகழ்வில், திமுகவை குறித்து கடுமையான விமர்சனங்களினை முன்வைத்திருந்தார்.
அதிலும் குறிப்பாக கடந்த ஆண்டு நடைபெற்ற கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு சம்பவம் குறித்து பேசிய போது, “கரூர் போலீசே எங்களை கூட்டிட்டு வந்த அந்த நாடகத்தை முழுசா நம்பிட்டேன். இதுக்கெல்லாம் யார் காரணம்? இதெல்லாம் யார் சொல்லி செஞ்சது?
குடும்ப உறவுகள இழந்து அந்த வலியோடு இருக்க என்ன ஏளனமா பேசுவீங்களா.. என் மேல பழிய தூக்கி போடுவீங்களா.. இப்படி நடந்திருச்சேனு அந்த வேதனையோடு, வீட்டில இருந்த என்ன, ஓடி ஒளிஞ்சிட்டானு சொல்றீங்களா” என பல கேள்விகளினையும் முன்வைத்து இருந்தார்.
முதல்வர் விஜய்யின் இந்த இந்த பேச்சுற்கு தற்போது திமுக தரப்பில் எதிர்வினை எழுந்துள்ளது.
தனி விமானம் பிடித்து ஓடியது யார்?
இது குறித்து முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்டுள்ள பதிவில், “கடந்த வருடம் செப்டம்பர் 27 அன்று நடந்த கரூர் துயரச் சம்பவத்தின் போது பாதிக்கப்பட்ட, எனது உயிரில் கலந்த கரூர் மக்களுக்காக களத்தில் துணை நின்று காப்பாற்றியது யார்? எனது கரூர் சொந்தங்களுக்காக இரவு பகல் பாராமல் முன் நின்று உதவியது யார்?
என மக்களுக்கு தெரியும்
திருச்சி விமான நிலையத்தில் பத்திரிகையாளர்கள் அத்தனை பேர் இறந்துள்ளதாகக் கூறியும், பாதிக்கப்பட்ட மக்களைப் பார்க்காமல், தனி விமானம் பிடித்து ஓடியது யார் என்பது எனது கரூர் மக்களுக்கு நன்றாகத் தெரியும்” என குறிப்பிட்டுள்ளார்.

