16 6
இந்தியாசெய்திகள்

41 ஆண்டுகளுக்குப் பின்னர் விண்வெளி சென்ற இந்தியா வீரர்

Share

இந்தியாவிலிருந்து விண்வெளிக்கு 41 ஆண்டுகளுக்கு பின்னர் விண்வெளி வீரர்களில் ஒருவரான சுபான்ஷு சுக்லா அனுப்பப்பட்டுள்ளார்.

மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் இந்தியாவின் ‘ககன்யான்’ திட்டத்துக்குத் தேர்வான சுபான்ஷு சுக்லா, அமெரிக்காவில் செயல்படும் மனித விண்வெளிப் பயணச் சேவைகள் நிறுவனமான ‘ஆக்ஸியம் ஸ்பேஸ்’ நிறுவனத்தின் ‘ஆக்ஸியம்-4’ திட்டத்தின்கீழ் நேற்று(25) விண்ணுக்கு அனுப்பப்பட்டுள்ளார்.

அத்தோடு, அமெரிக்காவைச் சேர்ந்த கமாண்டர் பெக்கி விட்சன், போலந்து நாட்டு விண்வெளி வீரர் ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி விஸ்னீவ்ஸ்கி, ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த விண்வெளி வீரர் திபோர் கபு ஆகியோரும் விண்வெளிக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர்.

இந்தநிலையில், குறித்த விண்வெளி வீரர்கள் 14 நாள்கள் அங்கேயே தங்கி ஆய்வு நடத்தி விட்டு பூமிக்கு திரும்பவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தியாவின் முதல் விண்வெளி வீரரான ராகேஷ் சர்மாவினை தொடர்ந்து 41 ஆண்டுகளுக்கு பின்னர் விண்வெளி சென்ற பெருமையை சுபான்ஷு சுக்லா பெற்றுள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 48
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நெகம்போவில் பரபரப்பு: தப்பியோடிய போதைப்பொருள் கடத்தல் வாகனம் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு!

போதைப்பொருள் கடத்துவதாக சந்தேகிக்கப்பட்ட வாகனம் ஒன்று மீது, நெகம்போவில் காவல்துறை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள்...

Untitled 47
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தேர்தல் ஆணையத்தின் புதிய மின்சேவைகள்: வீட்டிலிருந்தே வாக்காளர் விபரங்களைப் புதுப்பிக்கலாம்!

குடிமக்கள் கிராம அலுவலர் அலுவலகங்கள், மாவட்ட தேர்தல் அலுவலகங்கள் அல்லது தேர்தல் ஆணையத்திற்கே நேரில் செல்லாமலேயே...

Untitled 46
செய்திகள்உலகம்

ஈரான் போரை நிறுத்துங்கள்: அதிபர் டிரம்ப்பிடம் எகிப்து அதிபர் சிசி உருக்கமான கோரிக்கை!

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றங்களைத் தணித்து, அமைதியை நிலைநாட்ட அமெரிக்க அதிபர் டொனால்ட்...

Untitled 45
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிசக்தி நெருக்கடி: இலங்கையில் மின்சாரக் கட்டுப்பாடுகள் மற்றும் புதிய வழிகாட்டல்கள் வெளியீடு!

மத்திய கிழக்கில் நிலவும் மோதலால் ஏற்பட்ட உலகளாவிய எரிசக்தி நெருக்கடிக்கு மத்தியில், இலங்கை முழுவதும் எரிபொருள்...