யாழில் இளவயது நீரிழிவு நோயாளர்கள் அதிகரிப்பு

diabetes prevention

யாழ்.மாவட்டத்தில் நீரிழிவு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்வதாக யாழ்.போதனா வைத்தியசாலையின் நீரிழிவு சிகிச்சை நிலையத்தின் பொறுப்பதிகாரி ம.அரவிந்தன் தெரிவித்துள்ளார்.

யாழ்.போதனா வைத்தியசாலையில் நேற்றைய தினம் திங்கட்கிழமை நீரிழிவு சிகிச்சை முகாமை ஆரம்பித்து வைத்த பின் ஊடகங் களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ்.மாவட்டத்தைப் பொறுத்தவரை தற்போது நீரிழிவு நோய் என்பது பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. குறிப்பாக இளவயதினருக்கு இந்த நீரிழிவு நோயானது அதிகமாக காணப்படு கின்றது.

இந்த நோய்த் தாக்கத்தினால் எதிர்காலத்தில் பல பாதிப்புகள் ஏற்படக் கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளது. குறிப்பாக இந்த நீரிழிவு நோய் தொற்றுக்கு உள்ளாகுவோருக்கு ஏனைய பல தொற்றுநோய்களும் ஏற்படும்.

நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு பாரிசவாதம் மற்றும் ஏனைய பல தொற்று நோய்கள் ஏற்படகூடிய சாத்தியக் கூறுகள் காணப்படுகின்றன. எனவே இளவயதினர் குறித்த நீரிழிவு நோய் தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டும்.

உடற்பயிற்சி, முறையான உணவுப் பழக்கங்கள் அல்லது நீரிழிவு பரிசோதனை மேற்கொள்வதன் மூலமாகவோ இந்த நீரிழிவு நோயை ஆரம்பத்திலேயே குணப்படுத்த முடியும்.

யாழ்.மாவட்டத்தில் நீரிழிவுநோய் தொடர்பில் பொதுமக்கள் சற்று அவதானமாக செயற்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

#SriLankaNews

Exit mobile version