அதானி குழுமத்தால் முன்னர் கைவிடப்பட்ட மன்னார் காற்றாலைத் திட்டத்தை மீண்டும் ஆரம்பிப்பதற்கு முன், அப்பகுதியில் வலசை (புலம்பெயர்) பறவைகள் தொடர்பில் ஆழமான ஆய்வு ஒன்றை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது.
குறித்த ஆய்வுக்காகக் குறைந்தபட்சம் ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகள் வரை ஆகும் எனத் தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த ஆய்வு, குறித்த பகுதியில் புலம்பெயர்ந்த பறவைகளின் வடிவங்கள் மற்றும் வாழ்விடங்களை ஆய்வு செய்யும் எனவும், இது காற்றாலைகள் புலம்பெயர்ந்த பறவைகள் மீதான தாக்கத்தைப் புரிந்துகொள்ள உதவும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
தேவையான அனைத்து ஒப்புதல்களையும் பெற்ற பின்னர், அத்தகைய திட்டங்களைச் செயல்படுத்த ஒரு புதிய முதலீட்டாளரைத் தேர்ந்தெடுப்பதே தற்போதைய அரசாங்கத்தின் உத்தியாகக் கையாளப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
எதிர்வரும் காலங்களில் மன்னாரில் புதிய காற்றாலை மின் உற்பத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதை இடைநிறுத்துவதற்கு அரசாங்கம் ஏற்கனவே நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

