சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நீடிக்கப்பட்ட நிதி வசதியின் (EFF) கீழ் ஆதரிக்கப்படும் இலங்கையின் பொருளாதார சீர்திருத்த வேலைத்திட்டத்தின் ஐந்தாவது மீளாய்வை நிறைவு செய்து, IMF பணியாளர்களும் இலங்கை அதிகாரிகளும் பொருளாதாரக் கொள்கைகள் தொடர்பான பணியாளர் மட்ட உடன்பாட்டை கடந்த ஒக்டோபர் 09 ஆம் திகதி எட்டினர்.
இந்த உடன்பாட்டின் அடிப்படையில், சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபையானது எதிர்வரும் டிசம்பர் 15 ஆம் திகதி இந்த ஐந்தாவது மீளாய்வைப் பரிசீலிக்க உள்ளது.
நிறைவேற்று சபையின் ஒப்புதல் கிடைக்கப்பெற்றதன் பின்னர், சுமார் 347 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியைப் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பு இலங்கைக்குக் கிட்டும்.
இந்த நிதிப் பரிசீலனை இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

