கேகாலையில் பாரிய சட்டவிரோத எரிபொருள் கிடங்கு சுற்றிவளைப்பு

388404105

சட்டவிரோதமான முறையில், ரகசியமாக நடத்தப்பட்டு வந்த ஒரு எரிபொருள் கிடங்கைச் சுற்றி வளைத்த காவல்துறையினர், அதன் உரிமையாளரைக் கைது செய்துள்ளனர்.

கேகாலை பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் இந்த அதிரடி கைது நடவடிக்கையை மேற்கொண்டனர். ரகாபொல, மாஹேன பகுதியில் உள்ள ஒரு கட்டிடத்தில் இந்தச் சட்டவிரோத எரிபொருள் கிடங்கு கண்டுபிடிக்கப்பட்டது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தொலங்கமுவ, தெல்கமுவ பகுதியைச் சேர்ந்தவர் என்றும், இவரிடம் இருந்து 790 லீற்றர் டீசலை காவல்துறையினர் மீட்டுள்ளனர்.

மேலதிக விசாரணைகளுக்காகச் சந்தேகநபர் வரகாபொல காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

Exit mobile version