எதிர்வரும் காலங்களில் மூன்று வாரங்களுக்கு மழை பொய்யாவிட்டால் மின்துண்டிப்பை அமுல்படுத்த வேண்டிய நிலை உருவாகும் என நாடாளுமன்ற உறுப்பினரான சம்பிக்க ரணவக்க நாடாளுமன்றத்தில் இன்று தெரிவித்தார்.
தொடர்ந்து உரையாற்றிய அவர்,
நாட்டில் மின் விநியோகத்தை தற்போது பெய்து வரும் மழையினால் சீர் செய்து விடலாம்.
ஆனால் நெருக்கடியான சூழலுக்கு முகங்கொடுத்துள்ள இலங்கையில் எதிர்வரும் காலங்களில் மழை பெய்யாவிட்டால் மின் உற்பத்திக்கு தனியார் மின் உற்பத்தி சாலைகளை இயக்க முடியாத நிலைக்கு தள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.
#SriLankaNews