பட்டதாரிகள் என்னிடம் பட்டத்தை ஏற்றுக் கொள்வதும் நிராகரிப்பதும் அவர்களின் விருப்பம். இதில் எனக்கு எந்த பாதிப்பும் இல்லை என கொழும்பு பல்கலைக்கழகத்தின் வேந்தரும் நாரஹேன்பிட்டி அபயராம விகாரையின் விகாராதிபதியுமான முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்தார்.
கொழும்பு பல்கலைக்கழக பட்டதாரிகள் தேரரிடம் இருந்து பட்டச் சான்றிதழை பெற மறுத்தமை தொடர்பாக கேள்வி எழுப்பிய போதே அவர் இதனை தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து உரையாற்றிய அவர்,
சிங்கம் பசித்தாலும் புல் உண்பதில்லை என்பதை அனைவரும் மனதில் நிறுத்த வேண்டும் என மேலும் தெரிவித்தார்.
#SriLankaNews